Page:Tamil proverbs.pdf/103

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
85
  1. ஆறு வடிவிலேயும் கரிப்புத் தெளிவிலேயும் வருத்தம்.
    Their severity is most felt, when a flood subsides, and a famine terminates.

  2. ஆறெல்லாம் கண்ணீர் அடி எல்லாம் செங்குருதி.
    All the way is bedewed with tears, and the foot prints are red with blood.

  3. ஆற்றித் தூற்றி அம்பலத்தில் வைக்கப் பார்க்கிறான்.
    He aims to expose me, after comforting and abusing me.

  4. ஆற்றிலே போகிற தண்ணீரை அப்பா குடி, ஐயா குடி.
    Drink sir, and drink the water that is flowing in the river.
    Spoken of apparent generosity which in reality costs nothing.

  5. ஆற்றிலே ஒரு காலும் சேற்றிலே ஒரு காலுமாய் இருக்கிறான்.
    He has one foot in the river and one in mud.
    Said of one involved in inextricable difficulty.

  6. ஆற்றிலே போட்டாலும் அளந்துபோட வேண்டும்.
    Although you are throwing it into the river, measure it first.

  7. ஆற்றிலே கணுக்கால் தண்ணீரிலும் அஞ்சி நடப்பது உண்டு.
    Though water in a river is up to one’s ankle only, some will wade with hesitation.

  8. ஆற்றிலே ஊருகிறது மணலிலே சுவறுகிறது.
    Creeping along a river and sinking in the sand.

  9. ஆற்றிலே விட்ட தெர்ப்பைபோல் தவிக்கிறேன்.
    I am tossed about like a tuft of sacred grass that has been thrown into a river.

  10. ஆற்றிற் கரைத்த புளியும் அங்காடிக்கிட்ட பதருமாயிற்று.
    It is the pulp of the tamarind fruit dissolved in a river, and chaff sent to the bazaar.
    Said of things useless and unavailing.