Page:Tamil proverbs.pdf/105

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
87
  1. ஆன தெய்வத்தை ஆறு கொண்டுபோகிறது அனுமந்தராயனுக்குத் தெப்பத்திருவிழாவா ?
    After the river has carried away every imaginable deity, do you stay to celebrate an aquatic festival in honour of Hanuman?
    Said of one seeking the lesser aid when the greater has failed.

  2. ஆனமட்டும் ஆதாளியடித்துத்போட்டு, ஆந்தைபோல் விழிக்கிறான்.
    Having spent all he stares like an owl.

  3. ஆனமுதலை அழித்தவன் மானம் இழப்பது அரிதல்ல.
    Having lost his capital, it will not be difficult for him to lose his reputation.

  4. ஆனவன் ஆகாதவன் எல்லாத்திலும் உண்டு.
    The good and the bad exist among all.

  5. ஆனால் அச்சிலே வார்க்கிறேன் ஆகாவிட்டால் மிடாவிலே வார்க்கிறேன்.
    If I succeed I will pour it into a mould, if not, into a large pot.
    Accommodating one’s conduct to circumstances.

  6. ஆனி அடியிடாதே கூனி குடிபோகாதே.
    Do not begin to build in June; nor set out to occupy a house in March.

  7. ஆனி அரை ஆறு, அவணி முழு ஆறு.
    In June half a river, in August a full river.

  8. ஆனி ஆனை வாலொத்த கரும்பு.
    In June sugar-cane is like an elephant’s tail.

  9. ஆனை அசைந்து தின்னும் வீடு அசையாமல் தின்னும்.
    An elephant moves when eating, a house eats without moving.

  10. ஆனை ஆசாரவாசலைக் காக்கும், பூனை புழுத்த மீனைக் காக்கும்.
    An elephant waits before the outer hall of a king’s court; a cat watches the putrid fish.