Page:Tamil proverbs.pdf/119

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
101
  1. இரா முழுதும் ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் என்ன என்ற கதை.
    The story of one who having listened to the reading of the Rámayana a whole night, asked what relationship existed between Síta and Ráma.

  2. இராமேசுரத்துக்குப் போயும் சனீசுரன் தொலையவில்லை.
    Though he went on a pilgrimage to Ràmèswaram, Saturn has not left him.

  3. இராவணன் குடிக்கு மகோதரன் போலும், சுயோதனன் குடிக்குச் சகுனிபோலும்.
    He is what Mahódharan was to the family of Rávana and what Sakuni was to Suyodhana.
    Said of one who under professions of friendship secretly plots one’s ruin.

  4. இராவண சந்நியாசிபோல் இருக்கிறான்.
    He is as Ràvana in the guise of a hermit.

  5. இராவுத்தனைத் தள்ளினதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் குதிரை.
    It is said that the horse not only threw his rider, but dug his grave also.

  6. இருக்கிற அன்றைக்கு எருமைமாடு தின்றாற்போல.
    Like a buffalo he consumes the day's supply.

  7. இருக்கிறவன் செவ்வையாய் இருந்தால் சிரைக்கிறவன் செவ்வையாய்ச் சிரைப்பான்.
    If he who is being shaved sits properly, the barber will shave well.

  8. இருக்க வேண்டும் என்றால் இரும்பைத் தின்.
    If you wish to live long, eat iron.

  9. இருக்க இருக்க எல்லாம் இசைவாகும்.
    In time all will be in harmony.