Page:Tamil proverbs.pdf/128

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
110
பழமொழி.
  1. இளைத்தவள் தலையில் ஈரும் பேனும்.
    In the tresses of a poor woman are found nits and lice.

  2. இளைத்தவன் சினேகிதனைச் சேர்.
    Associate with the friend of the poor.

  3. இளைத்தவனே எள்ளை விதை.
    O you weak fellow, sow the sessamum seed.

  4. இளையாள் இலைதின்னி மூத்தாள் காய்அறிவாள்.
    The younger sister feeds on leaves, the elder is accustomed to fruit.

  5. இளயாளே வாடி மலையாளம் போவோம், மூத்தாளே வாடி முட்டிக்கொண்டு சாவோம்.
    Come my younger sister, we will proceed to Malayalam; come my elder sister, we will strike our heads together and die.

  6. இறகு முற்றி்ப் பறைவை ஆனால், எல்லாம் தன் வயிற்றைத் தான் பார்க்கும்.
    When mature and on the wing, all birds will look after their own food.

  7. இறக்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்குச் சிறகு.
    When death approaches, white-ants take wing.

  8. இறக்கும் காலம் வராமல் பிறக்குமா ஈசலுக்குச் சிறகு?
    Will white-ants take wing except on the approach of death?

  9. இறங்கும் துறையிலே நீத்தானால, இந்த ஆற்றை எப்படிக் கடக்கிறது?
    If on stepping into the river one is obliged to swim, how will he get across?

  10. இறங்கு பொழுதிலே மருந்து குடி.
    Take medicine at sun-set.

  11. இறந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி.
    The dead is the pilot of the living.