Page:Tamil proverbs.pdf/129

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
111
  1. இறந்தவன் பிள்ளை இருந்தவன் அடைக்கலம்.
    The child of the dead is the ward of the living.

  2. இறந்தவனுக்கு எள்ளும் தண்ணீரும்.
    Sessamum and water offered to the dead.

  3. இறுத்த குடிக்கு அனர்த்தம் இல்லை.
    A family out of debt is out of danger.

  4. இறுப்பானுக்குப் பணமும் கிடையாது. உழைப்பானுக்குப் பெண்ணும் கிடையாது.
    He who pays his debts cannot obtain money, nor can the labourer obtain a wife.

  5. இறைச்சி தின்கிறவர் கடுப்புக்கு மருந்து அறிவார்.
    They who live on flesh are acquainted with the medicine for tooth-ache.

  6. இறைச்சி தின்றாலும் எலும்பைக் கோத்துப் போட்டுக்கொள்ளலாமா?
    Is one to wear a neck-lace of bones because he eats flesh?
    This and the preceding proverb are somewhat singular but not unnatural among a vegetarian people.

  7. இறைத்த கிணறு ஊறும், இறையாத கிணறு நாறும்.
    The water of a well always drawn, is fresh, that of a well not drawn is fetid.

  8. இறைத்த கிணறு சுரக்கும்.
    The water of a well always drawn springs up a-fresh.

  9. இனம் பிரிந்த மான்போல.
    Like a deer separated from its herd.

  10. இனிமேல் ஒரு தெய்வத்தைக் கையெடுக்கிறதா?
    Hereafter is it to lift up the hands to a god?

  11. இனிமேல் எமலோகபரியந்தம் சாதிக்கலாம்.
    Hereafter he may effect his purpose as far as the realms of Yama.