Page:Tamil proverbs.pdf/130

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
112
பழமொழி.
  1. இன்பமும் துன்பமும் பொறுமையிலே
    Joy and grief must be regulated by moderation.

  2. இன்பத்தில் ஆசை எவர்க்கும் உண்டு.
    Happiness is desired by all.

  3. இன்பமும் துன்பமும் எடுத்த உடலுக்கு.
    The body it is that is affected by pleasure and pain.

  4. இன்று இருப்பார் நாளைக்கு இல்லை.
    Those who are alive to-day may not be on the morrow.

  5. இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்குக் குலை அறுப்பான்.
    He who cut off the leaves to-day may possibly cut off the bunch to-morrow.

  6. இன்றைக்கு ஆகிறது நாளைக்கு ஆகட்டும்.
    That which is practicable to-day may be so on the morrow.

  7. இன்றைக்குச் செத்தால் நாளைக்கு இரண்டு நாள்.
    If one die to-day, tomorrow will be the second day.

  8. இன்றை என்பதும் நாளை என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்.
    To say to-day, to-morrow, indicates refusal.


ஈ.

  1. ஈ கலையாமல் தேன் எடுப்பார்கள், எடுக்காமற் பிடிப்பார்கள்.
    They will take the honey without dispersing the bees, they will take it without raising it up.

  2. ஈகை உடையவன் எக்களிப்பு அடைவான்.
    The liberal giver will be happy.

  3. ஈக்கு விடம் தலையில், தேளுக்குக் கொடுக்கில்.
    In a fly, the head is the seat of poison, in a scorpion, the tail.