Page:Tamil proverbs.pdf/136

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
118
பழமொழி.
  1. உடைமுள்ளுக்கு எதிரே உதைக்கலாமா?
    Can you kick against the thorns of the Acacia?

  2. உடைமை என்பது கல்வியுடைமை.
    Learning is real wealth.

  3. உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.
    Wealth and poverty are not abiding.

  4. உ்டைமையும் கொடுத்து அருமையும் குலைகிறதா?
    What! give one’s property and sacrifice one’s reputation?

  5. உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?
    Will a crop not looked after by the owner flourish?

  6. உடையவன் சொற்படி உரலைச்சுற்றிக் களைபறி.
    Pluck up the weeds about the mortar as your master bids you.

  7. உடையவனிற் கைப்பறினவன் மிடுக்கன்.
    An embezzler is more obstinate than the owner.

  8. உடையவன் சொற்படி கமுகடி களைபறி.
    Weed around the areca tree at thy master’s biding.

  9. உடையவன் இல்லாச் சேலை ஒரு முழம் கட்டை.
    The cloth whose owner is absent is a cubit too short.

  10. உடையார் வீட்டு மோருக்கு அகப்பைக் கணக்கு என்ன?
    What necessity is there for estimating the quantity of butter-milk by the ladle in the homestead of the chief?

  11. உட்கார்ந்து அல்லவோ படுக்கவேண்டும்?
    You must sit before lying down, must you not?

  12. உட்காந்தவனைக் கட்ட மாட்டாதவன் ஓடுகிறவனைக் கட்டுவானா?
    Can he tie a man that is running who cannot tie one that is sitting!

  13. உட்சுவர் இருக்கப் புறச்சுவர் பூசலாமா?
    What! beautify the outside of a wall while the inside is neglected?