Page:Tamil proverbs.pdf/140

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
122
பழமொழி.
  1. உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் ஆகாது.
    Protruding teeth and a hand given to thieving are bad.

  2. உதட்டிலே புண் ஆனால் பால் கறக்காதா?
    Will the cow not yield its milk because it has sore lips?

  3. உதட்டுத் துரும்பு ஊதப் போகாது?
    A small particle adhering to the lip cannot be removed by blowing.

  4. உதர நிமித்தம் வெகு கிர்தவேஷம்.
    Divers disguises for the sake of the belly.

  5. உதவாப் பழங்கலமே ஓசை இல்லா வெண்கலமே?
    Thou art a useless vessel, a piece of brass without sound!

  6. உதவாத செட்டிக்குச் சீட்டு எழுதினதுபோல.
    Like writing a chit to a thrifty merchant.

  7. உதவி செய்வார்க்குச் சீட்டு எழுதினதுபோல.
    What, accident can harm those who help others?

  8. உதறுகாலி வந்தாள் உள்ளதும் கெடுத்தாள்.
    A woman with a bustling gait came and destroyed what there was.

  9. உதாரிக்குப் பொன்னும் துரும்பு.
    Even gold is a thing of nought to the generous.

  10. உதிரத்துக்கு அல்லோ உருக்கம் இருக்கும்?
    Sympathy arises, does it not, from consanguinity?

  11. உதைத்த கால் புழுக்கிறதுபோது அல்லவோ புழுக்கம்?
    Worms will breed in due course, will they not, in a foot accustomed to kick?

  12. உதைத்த கால் புழுக்கிறதற்குமுன்னே அடிவயிறு சீழ்கட்டுகிறது.
    Before his kicking feet were eaten of worms his abdomen had ulcerated.