Page:Tamil proverbs.pdf/145

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
127
  1. உருட்டும் புரட்டும் மிரட்டும் சொல்லும்.
    Tricks and frauds and threats.

  2. உருத்திராக்ஷப் பூனை ஒன்றும் தெரியாதுபோல் இருக்கும்.
    Like a beaded cat he appears as if he knew nothing.

  3. உருத்திராக்ஷப் பூனை உபதேசம் பண்ணினதுபோல.
    As a beaded cat gave divine instruction.

  4. உருப்படத் திருப்படும்.
    As the figure is formed, beauty will become manifest.

  5. உருவத்தை அல்ல குணத்தைப்பார், பணத்தையல்ல சனத்தைப்பார்.
    Look to the temper, not beauty, to the connections not at money, when choosing a wife.

  6. உருவத்தினால் அல்ல, இன்பப் பேச்சினால் கிளி நன்குமதிக்கப்படும்.
    It is not for its form, but for its sweet prattling, that a parrot is esteemed.

  7. உருவிய வாளை உறையில் இடாத வீரன்.
    A hero who does not sheath his sword.

  8. உலகத்துக்கு ஞானம் பேய், ஞானத்துக்கு உலகம் பேய்.
    To the world, wisdom is folly, to wisdom, the world is folly.

  9. உலகம் பல விதம்.
    The world has many forms.

  10. உலகிலே கள்ளனுக்கு ஊரார் யாவரும் பகை.
    The whole country is at enmity with the thief who dwells there.

  11. உலக்கைப்பூசைக்கு அசையாதது திருப்பாட்டுக்கு அசையுமா ?
    Will that which has resisted the strokes of the pestle shake at a sacred chant?

  12. உலக்கைதேய்ந்து உளிப்பிடி ஆயிற்று.
    The pestle by wearing away has become the handle of a chisel.