Page:Tamil proverbs.pdf/147

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
129
  1. உழவின் மிகுத்த ஊதியம் இல்லை.
    Nothing more advantageous than tillage.

  2. உழவு ஒழிந்த மாடு பட்டிப்புறத்திலே.
    Cattle unfit for the plough are kept outside.

  3. உழவு மாடு ஆனால் ஊருக்குள்ளே விலைப்படாதா?
    If the ox be fit for the plough, will it not fetch a price in its own village?

  4. உழவுக்கு ஒரு சுற்றும் வராது, ஊணுக்கு முன்னே வரும்.
    At the plough it will not go a single round, at foddering time it comes first.

  5. உழவுக்குப் பிணைத்துவிடுகிற மாடும், கூட்டுக்குப் பிடித்துவிடுகிற ஆளும் உதவாது.
    The bullock yoked to the plough by force, and a man acting as a subsitute are alike useless.

  6. உழுகிறதைவிட்டு நழுவுகிறவன் தெய்வம் ஆடினாற்போல.
    Like one who, to avoid ploughing, feigned to be demonized.

  7. உழுகிற நாளையில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளையில் அரிவாள் கொண்டுவந்தாற்போல.
    As if one retired into the interior in the ploughing season, and returned with a sickle at the approach of harvest.

  8. உழுகிறமாடு பரதேசம் போனால், அங்கு ஒருவன் சுட்டி உழுவான் இங்கு ஒருவன் கட்டி உழுவான்.
    If a ploughing bullock go astray, it will be yoked wherever found.

  9. உழுகிற மாட்டை நுகத்தால் அடித்தாற்போல.
    Like beating the ploughing ox with the yoke.

  10. உழுகிற மாட்டை எருது நக்கினதுபோல.
    As an ox licked a yoke of oxen when ploughing.

  11. உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சினமுறை கொண்டாடும்.
    The ox treats the unskilful ploughman as his brother-in-law.