Page:Tamil proverbs.pdf/163

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
145
  1. எடுத்த அடி மடங்குமா?
    Will the lifted foot be drawn back?

  2. எடுத்துவிட்ட எருது எத்தனை நாள் உழும்?
    How long can an ox plough that requires to be lifted up?

  3. எடுப்பது பிச்சை ஏறுவது பல்லக்கு.
    His occupation is begging, his conveyance a palanquin.

  4. எடுப்பாரும் பிடிப்பாரும் உண்டானால் இளைப்பும் தவிப்பும் உண்டு.
    Where many are in attendance to lift up and support, there will be weariness and fainting.

  5. எடுப்பார் கைக் குழந்தை.
    A baby in the arms.

  6. எடுப்பார் மழுவைத் தடுப்பார் புலியைக் கொடுப்பார் அருமை.
    There are who take up the battle axe, and there are who stop tigers, but givers ate scarce.

  7. எடுப்புண்ட கலப்பை இருந்து உழுமா?
    Will a worn out plough last long?

  8. எட்டாப் பழத்தைப் பார்த்துக் கொட்டாவி விட்டதுபோல.
    As one gazed and gaped at a fruit beyond his reach.

  9. எட்டாப் பூ தேவர்க்கு எட்டும் பூ தங்களுக்கு.
    Flowers beyond reach are sacred to God, but those within reach are for themselves.

  10. எட்டிக் குட்டி இறங்கிக் காலைப் பிடித்துக்கொள்ளுகிறதா?
    What! is it to reach up and cuff, and cower and cling to the feet?

  11. எட்டி பழுத்து என்ன, ஈயாதார் வாழ்ந்து என்ன?
    What if the fruit of the etti tree (strychnos nux vomica) ripens; of what use is the prosperity of the niggardly?

  12. எட்டிமரமானாலும் பச்சென்று இருக்கவேண்டும்.
    Though a poisonous tree, it should be green.