Page:Tamil proverbs.pdf/168

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
150
பழமொழி.
  1. எதிர்வீடு ஏகாலி வீடு, பக்கத்து வீடு பணிசெய்பவன் வீடு, அடுத்த வீடு அம்பட்டன் வீடு.
    The opposite house is the washerman’s, the adjoining house is the goldsmith’s, and the next to mine is that of the barber.

  2. எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
    When the opposed is poor, the anger of his opponent ends in cruelty.

  3. எது எப்படிப் போனாலும் தன் காரியம் தனக்கு.
    No matter how any thing may go, each should mind his own business.

  4. எத்தனைதான் துலக்கினாலும் பித்தளை நாற்றம் போகுமா ?
    No matter how frequently it may be polished, the bad odour of brass will not leave it.

  5. எத்தனை புடம் இட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகாது.
    Though iron may be heated never so much, it will not become gold.

  6. எத்தனை ஏழை ஆனாலும் எலுமிச்சங்காய் அத்தனை பொன் இல்லாமற்போமா ?
    However poor one may be, will he not possess gold, at least of the value of a lemon?

  7. எத்தாற் பிழைக்கலாம் ஒத்தாற் பிழைக்கலாம்.
    How may we subsist? if united we may subsist.

  8. எத்திலே பிள்ளை பெற்று இரவலிலே தாலட்டுகிறது.
    Bringing forth a child without cost, and rocking it in a borrowed cradle.

  9. எத்தேச காலமும் வற்றாப் பெருஞ் சமுத்திரம்.
    An ocean that knows no ebb anywhere at any time.

  10. எந்த ஆயுதமும் தீட்டத்தீட்டக் கூரும்.
    The more an instrument is whetted, the sharper it becomes.