Page:Tamil proverbs.pdf/169

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
151
  1. எந்த இலை உதிர்ந்தாலும் ஈச்சம் இலை உதிராது.
    Though the leaves of other trees may fall off, those of the date-palm will not.

  2. எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்கிறதோ தெரியாது.
    It is not known what species of snake may be found in any particular hole.

  3. எந்த வாக்குப் பொய்த்தாலும் சந்தவாக்குப் பொய்யாது.
    Whatever else may fail the words, marks, of low breeding will not fail.

  4. எந்நேரமும் அவன்பேரில் கண்ணாய் இருக்கிறான்.
    His eye is always upon her.

  5. எமனுக்கு வழிகாட்டுவான்.
    He can pilot Yama, the regent of the dead.

  6. எமன் பிள்ளையைப் பேய் பிடிக்குமா ?
    Will a demon seize the child of Yama, the regent of the dead?

  7. எய்கிறவன் எய்தால் அம்பு என்ன செய்யும் ?
    What can the arrow do if discharged by a skilful archer?

  8. எய்கிறவன் இருக்க அம்பை நோவானேன் ?
    Why blame the arrow, letting the archer go free?

  9. எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளினதுபோல.
    As a burning firebrand was pushed into the hearth.

  10. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி ?
    Which of the burning firebrands is the best?

  11. எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
    If the burning fuel be removed, the bubbling will cease.

  12. எரிகிற நெருப்பை எண்ணெய் விட்டு அவிக்கலாமா ?
    May a burning fire be extinguished by pouring oil on it?

  13. எரிகிற நெருப்பிலே நெய் விட்டதுபோல.
    As if ghee were poured on a flaming fire.