Page:Tamil proverbs.pdf/171

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
153
  1. எருது நினைத்த இடத்திலே தோழம் கட்டுகிறா ?
    Is its shed put up where the bull may think fit?

  2. எருது கோபங்கொண்டு பரதேசம் போனதுபோல.
    As a bull went away in a rage to a foreign country.

  3. எருது மறைவிற் புல்லுத் தின்கிறாயா ?
    Dost thou eat grass screened by a bull?

  4. எருதுக்கு நோய் வந்தால் கொட்டாயைச் சுடுகிறதா ?
    Is its shed to be burnt dawn because the ox is sick?

  5. எருதும் வண்டியும் ஒத்தால் மேடு பள்ளம் ஏது ?
    What matters the ruggedness of the road if the bullocks and bandy-a country cart-hold together?

  6. எருமைக்கடா என்றாலும் குழந்தைக்குப் பால் ஒரு பீர் இல்லையா என்கிறாய்.
    Though it is a male buffalo, you ask me if there be not a drop of milk for the child.

  7. எருமை வாங்குமுன் நெய்விலை கூறுகிறாய்.
    You publish the price of ghee before buying a buffalo.

  8. எருமைக் கொம்பு நனைகிறதற்குமுன்னே எழுபது தரம் மழை வருகிறது.
    It will rain seventy times before a buffalo’s horns will be wet.

  9. எருமைக் கோமயம் எக்கியத்திற்கு ஆகுமா ?
    Will the dung of the buffalo serve for sacrificial purposes?

  10. எருமை மாட்டின்மேல் மழை பெய்ததுபோல.
    As it rained on a buffalo.

  11. எருமை மாட்டின்மேல் எத்தனை சூடு இருந்தாலும் தெரியாது, பசுமாட்டில் ஒரு சூடு இருந்தாலும் தெரியும்.
    Brands on a buffalo however numerous will scarcely appear, but a single brand on a cow will be visible.