Page:Tamil proverbs.pdf/172

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
154
பழமொழி.
  1. எருமை இருந்தல்லோ பால் கறக்கவேண்டும் ?
    We may milk may we not, provided there be a buffalo?

  2. எருமையிலும் வெள்ளாடு ஏறக்கறக்குமா ?
    Will a goat yield more milk than a buffalo?

  3. எருவுக்குப் போனவன் இளையாளைக் கைப்பிடித்தாற்போல.
    As he who went in search of manure, seized the hand of a maiden.

  4. எருவுக்குப் போனவன் எலுமிச்சம்பழம் எடுத்ததுபோல.
    As he who went to pick up cow-dung, gathered lemons.

  5. எலி அம்மணத்தோடே போகின்றது என்கிறான்.
    He says that the rat goes naked.

  6. எலி அழுதால் பூனை விடுமா ?
    Will the cat leave its hold on the crying of the rat?

  7. எலி அழுது புலம்பினாலும் பூனை பிடித்தது விடாது.
    Although the rat may cry and lament, the cat will not relinquish its hold.

  8. எலி அறுக்கும் தூக்கமாட்டாது.
    The rat nibbles the grain, but it does not carry off the basket.

  9. எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
    Where there is a rat, there will also be a snake.

  10. எலிக்குப் பயந்து வீட்டைச் சுட்டதுபோல.
    Like burning down the house for fear of rats.

  11. எலிக்குப் பிராணவஸ்தை பூனைக்குக் கொண்டாட்டம்.
    The death-struggle of a rat is the sport of a cat.

  12. எலிக்கு அனுகூலம் பாம்பு பிடாரனுக்கு அஞ்சுதல், எளியார்க்கு அனுகூலம் வலியார் இராசனுக்கு அஞ்சுதல்.
    The snake’s fear of him who catches it, is favourable to the rat; when the strong fear the king, the weak are benefited.