Page:Tamil proverbs.pdf/173

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
155
  1. எலிக்கு மணியம் சுவரை அறுக்கிறதுதான்.
    The business of the rat is to burrow in the wall.

  2. எலி தலையிலே கோடாலி விழுந்ததுபோல.
    As an axe fell on the head of the rat.

  3. எலி தலையிற் கோபுரம் இடிந்து விழுந்தாற்போல.
    As if the tower of the temple should fall on the head of a rat.

  4. எலி பூனையை வெல்லுமா?
    Can a rat overcome a cat?

  5. எலி பூனைக்குச் சலாம்பண்ணுவதுபோல.
    As a rat makes salaam to a cat.

  6. எலிப்பிழுக்கை இறப்பில் இருந்து என்ன, வரப்பில் இருந்து என்ன?
    What matters it whether the droppings of a rat are in the inside of a sloping roof, or on the ridge of a cornfield?

  7. எலியும் பூனையும்போல இருக்கிறது.
    Living like a rat and a cat.

  8. எலியும் பூனையும் இணைந்து விளையாடினதுபோல.
    As the rat and the cat united in sport.

  9. எலியைக் கண்டு பூனை ஏக்கம் அடையுமா?
    Will the cat be alarmed at the sight of a rat?

  10. எலியைக் கண்டு பூனை ஏங்கி ஏங்கிக் கிடக்குமோ?
    Will a cat be greatly alarmed at the sight of a rat?

  11. எலிவளை ஆனாலும் தனிவளை வேண்டும்.
    A separate hole is to be preferred though it be a rat-hole.
    One’s own cot is desirable however humble.

  12. எலி வீடு கட்டப் பாம்பு குடிகொள்ளும்.
    A rat makes the hole, a snake inhabits it.

  13. எலி வேட்டைக்குத் தவில் அடிப்பாரா?
    Do they beat a tomtom when hunting rats?