Page:Tamil proverbs.pdf/178

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
160
பழமொழி.
  1. எளியவனை அடித்துப் புளியங்காய் பறித்தாற்போல.
    Like beating a poor man, and plucking his tamarind fruit.

  2. எளியவனுக்குப் பெண்டாய் இருக்கிறதிலும் வலியவனுக்கு அடிமை ஆகிறது நல்லது.
    It is better to be the slave of the wealthy, than the wife of the indigent.

  3. எளியவனைக் கண்டு வாயால் ஏய்க்கிறான்.
    Seeing that the man is poor, he deceives him by fair words.

  4. எளியவன் பெண்டாட்டி எல்லாருக்கும் மைத்துனிச்சி.
    The wife of a poor man is sister-in-law to all.

  5. எளியாரை வலியார் அடித்தால் வலியாரைத் தெய்வம் அடிக்கும்.
    If the powerful oppress the weak, God will punish them in return.

  6. எளியாரை எதிர் இட்டுக்கொண்டால் பிராண்ஹானி.
    Inferiors if opposed become mortal enemies.

  7. எள் அத்தனையை மலை அத்தனை ஆக்குகிறது.
    Magnifying a rape seed into a mountain.

  8. எள்ளுக்காய் பிளந்த விவகாரம்
    A dispute as easy to decide as the splitting of a rape seed.

  9. எள்ளுக்காய் பிளந்தாற் போலப் பேசவேண்டும்.
    One ought to speak as evenly as a rape-pod splits.

  10. எள்ளுக்குத் தக்க எண்ணெய், எள்ளுக்குத் தக்க பிண்ணாக்கு.
    Oil is proportioned to the sessamum, refuse proportioned to the pressed seed.

  11. எள்ளுக்குப் புள்ளு வரும் எச்சிற்கு எறும்பு வரும்.
    Birds are attracted by rape seed, ants by leavings.

  12. எள்ளுக்குள் எண்ணெய் போல.
    As oil in sessamum seed.