Page:Tamil proverbs.pdf/180

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
162
பழமொழி.
  1. எறும்புப் புற்றில் பாம்பு குடிகொள்வதுபோல.
    As a snake occupies an ant-hole.

  2. எறும்புக்கும் தன் கையால் எண்சாண் உடம்பு.
    Even an ant is eight spans long as measured by its own hand.

  3. எறும்பு ஊரக் கல் தேயும்.
    By the continual creeping of ants a stone will wear away.

  4. எறும்பின் கண்ணுக்கு எருமை மூத்திரம் ஏகப்பெருவெள்ளம்.
    The urine of the buffalo is as a perfect deluge in the eye of an ant.

  5. எறும்பு ஊரக் கல் குழியும்.
    By the continual creeping of ants a stone will become hollow.

  6. எறும்பு ஊர இடங்கொடுத்தால் எருதும் பொதியும் உள்ளே செலுத்துவான்.
    If room be given sufficient for ants to creep in, he will drive a loaded bullock that way.

  7. எறும்பு எடுத்துப் போவதற்குத் தடி எடுத்து நிற்கிறது, பெரிய பூசனிக்காய் போகிறது தெரியாதா?
    You stand armed with a club to watch that which may be carried away by ants, are you unable to see when a large pumpkin has been taken away?

  8. எறும்பு முதல் எண்ணாயிரம் கோடிக்கும் தெரியும்.
    It is known to the eighty thousand millions of creatures from an ant upwards.

  9. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை பெய்யும்.
    If ants carry their eggs to a higher place, it will rain.

  10. எனக்கு அட்டமத்துச் சனி.
    With me Saturn is in the eighth sign.

  11. எனக்கு ஊணும் இல்லை உறக்கமும் இல்லை.
    I have neither food nor sleep.