Page:Tamil proverbs.pdf/181

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
163
  1. எனது நாட்கள் எல்லாம் ஊமை கண்ட கனா போல் ஆயின.
    My days are like the dream of the dumb.

  2. என் ஈரலைக் கருக்கு அரிவாள் கொண்டு அறுக்கிறது.
    It cuts my liver with a sharp sickle.

  3. என் காரியம் எல்லாம் நந்தன் படைவீடாய் போயிற்று.
    My affairs are like Nandan’s camp.
    The name of a shoemaker who is reputed to have reigned as a king for three hours, and to have issued leather coin.

  4. என் குடி கெட்டதும் உன் குடி கெட்டதும் பொழுது விடிந்தால் தெரியும்.
    It will be known at day-break whether my family or your's has been ruined.

  5. என்பைத் தின்று சதையைக் கொடுத்து வளர்த்தாள்.
    Eating bones herself, she has brought up her children on flesh.

  6. என்மகள் வாரத்தோடே வாரம் முழுகுவாள், என் மருமகன் தீபாவளிக்குத் தீபாவளி முழுகுவான்.
    My daughter bathes once a week, my son-in-law bathes at dèpàveli.

  7. என் மருமகனுக்கு வேப்பெண்ணெயாம் தூக்கெண்ணெய்.
    Superior oil is said to be Mangosa oil to my son-in-law.

  8. என் முகத்திற் கரிபூசினாயே.
    Thou hast smeared my face with charcoal.

  9. என் முதுகின் தோல் உனக்குச் செருப்பாய் இருக்கும்.
    The skin of my back will serve you for shoes.

  10. என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உன் வீட்டுக்கு வந்தால் என்ன கொடுக்கிறாய்?
    When you come to my house, what do you bring, when I come to yours, what do you give?

  11. என்றும் மறைந்திருப்பதிலும் எதிரே போதல் உத்தமம்.
    It is better to come to the front at once than to be always concealed.