Page:Tamil proverbs.pdf/186

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
168
பழமொழி.
  1. ஏர் பிடித்தவன் என்ன செய்வான் பானைபிடித்தவள் பாக்கியம்.
    Comfort depends on her who has charge of the cooking pots, not on the ploughman.

  2. ஏலவே தொலைந்தது எங்களைத் தொட்ட கர்மம்.
    The sin which affected us is already removed.

  3. ஏலேலம்! ஏலேலம்! எருமைச்சாணி காய்கிறது.
    Elélam, Elélam, the buffalo dung is drying.
    The sound élélam is uttered by boatmen and others on the Coromandel coast when pulling together, as savas is, by boatmen on the Hoogly: some derive it from வலிக்கிறது.

  4. ஏலேலசிங்கன்பொருள் ஏழு கடலிற் போனாலும் திரும்பும்.
    The property of Elélasingam, though it pass over seven seas, will return.
    Elélasingam a wealthy merchant, the disciple of Tiruvalluvar.

  5. ஏவற்பேய் கூரையைப் பிடுங்கும்.
    The excited demon will take off the thatch.

  6. ஏவா மக்கள் மூவா மருந்து.
    Children who do their duty unprompted are as a life-preserving remedy.

  7. ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை.
    To the taskmaster a word, to the servant a burden on the head.

  8. ஏழை அழுத கண்ணீர் கூரியவாளை ஒக்கும்.
    The tears of the poor are as sharp swords.

  9. ஏழை பாக்குத் தின்ன எட்டுவீடு அறியவேண்டுமா?
    Because the poor man uses betel-nut, is it to be made known at eight houses?

  10. ஏழை பேச்சு அரண்மனைக்கு ஏறுமா?
    Will the speech of the poor go up to the palace?

  11. ஏழைப் பிள்ளைக்குத் தெய்வமே துணை.
    God is the helper of the helpless child.