Page:Tamil proverbs.pdf/187

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
169
  1. ஏழைப் பிள்ளைக்கு எவர்களும் துணை.
    Every one is a helper to a helpless child.

  2. ஏழையைக் கண்டால் மோழையும் பாயும் .
    Even a beast without horns will attack the poor.

  3. ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
    When told to mount, the bull is angry, when told to dismount, the lame man is dissatisfied.

  4. ஏறப்படாத மரத்திலே எண்ணப்படாத மாங்காய்.
    Innumerable mangoes on a tree no one can climb.

  5. ஏற விட்டு ஏணியை வாங்குகிறதா?
    What! remove the ladder after allowing one to mount?

  6. ஏறின கொம்பால் இறங்க வேண்டும்.
    One must come down on the branch by which he ascended.

  7. ஏறுகிற குதிரையிலும் உழவுமாடு அதிக உத்தமம்.
    A plough bull is superior to a saddle horse.

  8. ஏறுநெற்றி சூறுதலை எதிர்க்க வந்தால் ஆகாது.
    It is a bad omen to meet one with a high forehead or curly hair.

  9. ஏறுமாறாய்ப் பேசுகிறதா?
    What, is it to speak at random?

  10. ஏறும் தேமல் இறங்கும் படர்தாமரை கூடும் புருவம் குடியைக் கெடுக்கும்.
    Ascending cutaneous spots, descending ring-worm and eyebrows contiguous are ominous.

  11. ஏற்கனவே மாமி பேய்க்கோலம் அதிலும் கொஞ்சம் மாக்கோலம்.
    The mother-in-law is frightfully ugly already, and the flour on her face makes her more so.