Page:Tamil proverbs.pdf/191

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
173

ஒ.

  1. ஒக்கப் பிறந்த தங்கை ஓலமிட்டு அழச்சே ஒப்பாரித் தங்கைக்குச் சிற்றாடையாம்.
    When one’s sister is weeping for a cloth, is it to be given to a woman who resembles her?

  2. ஒச்சியம் இல்லாத ஊரிலே பெண் வாங்கின கதை.
    The story of a man taking a girl to wife in a village inhabited by the shameless.

  3. ஒடிந்த கோல் ஆனாலும் ஊன்றுகோல் இருக்கவேண்டும்
    Though a broken one, a walking stick is necessary.

  4. ஒட்டிக்கொண்டு வந்தும் தட்டிக் கழிக்கிறான்.
    Though I cling to him, he repels me.

  5. ஒட்டினால் தொட்டிலிலும் கொள்ளும் ஒட்டாவிட்டால் கட்டிலிலும் கொள்ளாது.
    If compressed the crib will hold it, but if not even a bedstead will not contain it.

  6. ஒட்டினாலும் உழக்குப்பீர்ச் சென்கிறதா?
    Is it to say draw one ulak of milk though the animal is lean?

  7. ஒட்டைக்குப் பளுவு ஏற்றுகிறதுபோல.
    As a camel is loaded.

  8. ஒதி பெருத்துத் தூணாமா?
    Though the odina tree grow large, will it do for a pillar?

  9. ஒதி பெருத்தால் உரலாமா?
    Though the odina tree grow large, will it serve for a mortar?

  10. ஒதி பெருத்து என்ன, உபகாரம் இல்லாதவன் வாழ்ந்து என்ன?
    What avails the growth of an odina tree? Of what use is the prosperity of the ungenerous?