Page:Tamil proverbs.pdf/197

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
179
  1. ஒருவர் அறிந்தால் இரகசியம் இருவர் அறிந்தால் பராசியம்.
    If known to one only it is a secret, if to two it is public.

  2. ஒருவனைப் பற்றி ஓரகத்திரு.
    Attach yourself to one person, and dwell in one house.

  3. ஒரு விரல் நொடி இடாது.
    A single finger cannot snap.

  4. ஒவ்வாக் கூட்டிலும் தனிமை அழகு, ஒவ்வாப் பேச்சு வசையோடு ஒக்கும்.
    Solitude is preferable to disagreeable society, an unpleasant expression may be felt as a reproach.

  5. ஒழுகாத வீடு உள்ளங்கை அத்தனை போதும்.
    If only as large as the palm of the hand a house that does not leak will suffice.

  6. ஒழுக்கம் உயர் குலத்தில் நன்று.
    Virtue is superior to rank.

  7. ஒழுக்கு வீட்டிலே வெள்ளம் வந்ததுபோல.
    As a flood came into a leaky house.

  8. ஒழுக்குக்கு வைத்த சட்டி போல.
    As a chatty placed under a leak.

  9. ஒழுங்கு ஒரு பணம் சளுக்கு முக்காற் பணம்.
    Propriety is worth a fanam, pride, three fourths of a fanam.

  10. ஒளிக்கும் சேவகனுக்கு முகத்தில் ஏன் மீசை?
    Of what use is a mustache to a sneaking soldier?

  11. ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா?
    When trying to conceal one’s self, is it fit to do so in the house of the chief?

  12. ஒளிக்கப் போயும் இடம் இடைஞ்சலா?
    Is the place too narrow for one who has gone to hide himself?