Page:Tamil proverbs.pdf/206

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
188
பழமொழி.
  1. கடல் வற்றிக் கருவாடு தின்னலாமென்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.
    It is said that the stork died while waiting for the ocean to dry, in the hope of getting a supply of dried fish.

  2. கடல் பெருகினால் கரையும் பெருகுமா?
    Will the shore extend when the sea flows?

  3. கடல் பெருகினால் கரை ஏது?
    What avails the shore when the sea flows?

  4. கடற் கரை தாழங்காய் கீழ் தொங்கி என்ன மேல் தொங்கி என்ன?
    What matters it whether the wild pine fruit on the sea-shore hangs high or low?

  5. கடனோடு கடன் கந்தப் பொடி காற்பணம்.
    Though my debt be increased, let me have a quarter of a fanam worth more of fragrant powder.

  6. கடன் இல்லாத கஞ்சி கால் வயிறு.
    One fourth supply of kanji for the stomach is better than debt.

  7. கடன்காரனுக்குக் கடனும், உடன்பிறந்தானுக்குப் பங்கும் கொடுக்கவேண்டும்.
    One must pay one’s creditor and give to a relation the portion due to him.

  8. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும்கெட்டான்; மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.
    He who borrowed to lend was ruined; and he who let go his hold of the tree he had climbed also perished.

  9. கடன் வாங்கியும் பட்டினி கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
    Famished though he has borrowed, an ascetic though he is wedded.

  10. கடன் வாங்கியும் பட்டினியா?
    What to famish after having borrowed money!