Page:Tamil proverbs.pdf/214

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
196
பழமொழி.
  1. கண்குத்திப்பாம்புபோலப் பார்த்திருந்தேன்.
    I was waiting like an eye-snake.

  2. கண் குருட்டுக்கு மருந்து இட்டால் தெளியுமா?
    Is blindness curable by an external application?

  3. கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையா?
    Though blind, does he sleep the less?

  4. கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்?
    What benefit can you expect from the worship of the sun if you have lost your eyesight?

  5. கண் பாவனையாய்க் கொண்டை முடிக்கிறது.
    Tying one’s lock of hair in imitation of others’.

  6. கண்ட கண்ட கோயில் எல்லாம் கை எடுத்துக் கும்பிட்டேன்.
    I worshipped with raised hands in every temple I visited.

  7. கண்டது பாம்பு கடித்தது மாங்கொட்டை.
    That which was seen was a snake, that which bit was the stone of a mango fruit.

  8. கண்டது காட்சி பெற்றுது பேறு.
    Whatever is seen is a sight, whatever is received is a gift.

  9. கண்டதைக் கேளாவிட்டால் உண்டு உறங்க மாட்டான்.
    He will neither eat nor sleep without asking whatever he sees.

  10. கண்டதைக் கேளாவிட்டால் கொண்டவன் அடிப்பான்.
    If she does not attend to the affairs of her family, her husband will beat her.

  11. கண்டறியாதவன் பெண்டு படைத்தால் காடு மேடு எல்லாம் இழுத்துத் திரிவானாம்.
    It is said that if an inexperienced man marries, he will wander about dragging his wife, through jungles and over hills.