Page:Tamil proverbs.pdf/226

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
208
பழமொழி.
  1. கரும்பு ருசியென்று வேரோடு பிடுங்கலாமா?
    May sugar-cane be plucked up by the root because it is of fine flavor?

  2. கரும்பை விரும்ப, அது வேம்பு ஆயிற்று.
    If taken to excess sugar-cane becomes bitter as margosa.

  3. கரும்பு கட்டோடே இருக்க எறும்பு தானே வரும்.
    Where bundles of sugar-cane are, there ants will come of themselves.

  4. கருவு இல்லாத முட்டையும் குரு இல்லாத வித்தையும்.
    An egg without yolk, an art without a teacher.

  5. கருவேலமரத்திற்கு நிழல் இல்லை, கன்னானுக்கு முறை இல்லை.
    The karuvél Acasia casts no shade, smiths observe no relationship in marrying.

  6. கரை காணாத தோணிபோல.
    As a doney out of sight of land.
    The common name of a country vessel, some of which are of considerable size. They have no deck and are thatched with palm leaves.

  7. கரை தட்டி கப்பல்போல.
    Like a stranded vessel.

  8. கரைப்பக்கம் பாதை இருக்கக் கப்பல் ஏறினவனும், சொல்லாததை மனையாளுக்குச் சொன்னவனும் பட்ட பாடுபோல.
    Like the misery endured by him who embarked when there was a way by land, and by the husband who revealed to his wife that which he ought not.

  9. கரைப்பார் கரைத்தாற் கல்லும் கரையும்.
    Under the management of the skilful, even a stone may be dissolved.