Page:Tamil proverbs.pdf/234

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
216
பழமொழி.
  1. கழுதை மயிர் பிடுங்கினால் இலாபம் என்ன நஷ்டம் என்ன?
    What profit or loss will arise from plucking off the hair of an ass?

  2. கழுதை மயிர் பிடுங்கித் தேசம் கட்டி ஆள்வானா?
    Can one reign as a king by selling ass-hair?

  3. கழுதைக்குத் தெரியுமா கஸ்தூரி வாசனை?
    Does an ass appreciate the odour of musk?

  4. கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்
    The foreign country of an ass is a ruinous wall.

  5. கழுதை தப்பினால் குட்டிச்சுவரிடத்தில் இருக்கும்
    If an ass goes astray, it may be found near a ruinous wall.

  6. கழுதைப்பொதியில் ஐங்கல மாறாட்டமா?
    Are there five kalams of fraud in the pack on an ass?

  7. கழுதை விட்டை ஆனாலும் கை நிரம்ப வேண்டும் என்கிறாய்.
    You say get a handful, although it be but ass dung.

  8. கழுத்திலே கரிமணி இல்லை பெயர் முத்துமாலை.
    Her name is pearl necklace, yet on her neck she has not a black bead.

  9. கழுவிக் கழுவிப் பின்னும் சேற்றை மிதிக்கிறதா?
    What! is it to tread in the mud every time you wash your feet?

  10. கழுவுக்கு ஏற்ற கோமுட்டி.
    A kómutti exactly fitted to the stake.

  11. களம் சாறுகிறவளை மிரட்டுவானாம் போர் பிடுங்குகிறவன்.
    It is said that he who steals grain from the stack, will frighten away the women who may sweep the threshing floor.

  12. களையக் கூடாததைக் கண்டால் அடி பெயர்ந்து அப்புறம் போ.
    If you cannot pluck up, pass by on the other side.

  13. களையக் கூடாததைக் கண்டியாமல் சகித்துக்கொள்.
    Do not fret yourself about that which cannot be avoided.