Page:Tamil proverbs.pdf/238

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
220
பழமொழி.
  1. கறந்த பால் முலைக்கு ஏறுமா?
    Will the milk that has been drawn, again enter the udder?

  2. கறந்த பாலைக் காய்ச்சாமற் குடித்தால் காச வியாதி தானே எடுபடும்.
    If fresh drawn milk unboiled be drunk, consumption may be cured.

  3. கறுத்தது எல்லாம் தண்ணீர் வெளுத்தது எல்லாம் பால் என்கிறான்.
    Whatever is black he calls water, and whatever is white he calls milk.

  4. கறுப்பு வெளுப்பு ஆகாது, கசப்பு இனிப்பு ஆகாது.
    Black will not become white, nor bitter sweet.

  5. கறுப்பு நாய் வெள்ளை நாய் ஆகுமா?
    Will a black dog become white?

  6. கறுமுறுகாந்தப் படலம் வாசிக்கிறார் கவிராயர்.
    The poet is reading the section on grumbling.

  7. கறையான் புற்றில் அரவம் குடிகொண்டதுபோல.
    Like a snake that occupied an ant-hill.

  8. கறையான் புற்றுப் பாம்புக்கு உதவுகிறது.
    An ant-hill is useful to a snake.

  9. கற்கண்டாற் செய்த எட்டிக்கனி கசக்குமா?
    Will etti fruit made of sugar-candy taste bitter?

  10. கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின்பு அதுவே இனிப்பு.
    Learning when being acquired is bitter, but when possessed it is sweet.

  11. கற்பகதருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்.
    Even a crow that lives in the kalpaka tree feeds on ambrosia.

  12. கற்பித்தவன் கண்ணைக் கொடுத்தவன்.
    He who gave the eye is he who taught.