Page:Tamil proverbs.pdf/239

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
221
  1. கற்பித்தவன் காப்பாற்றுவான்.
    He who preordained will protect or guide.

  2. கற்பில்லா அழகு வாசனை இல்லாப் பூ.
    Beauty without chastity, a flower without fragrance.

  3. கற்ற இடத்திலா வித்தையைக் காட்டுகிறது?
    To practise a trick on him who taught it?

  4. கற்றவரது கோபம் நீரின் பிளவுபோல் மாறும்.
    The anger of the learned passes away as water recovers its surface after being divided.

  5. கற்றது கையளவு கல்லாது உலகளவு.
    What he has learnt is a handful, and what he has still to acquire is wide as the world.

  6. கற்றது சொல்லான் மற்று என்ன செய்வான்?
    What other service will he do for you who would not tell you what he has learnt?

  7. கற்றவனுக்கு வித்தை கால் நாழி.
    To the artist his art is but a quarter of a náli.

  8. கற்ற வித்தையைக் காய்ச்சிக் குடிக்கிறவன்போலே.
    Like one who boils and drinks his learning.

  9. கற்றறி மோழையாய் இராதே.
    Be not a learned fool.

  10. கற்றவனும் உண்பான், பெற்றவளும் உண்பாள்.
    A learned man and a fruitful woman will not suffer from want of food.

  11. கற்றாழை நாற்றமும் பித்தளை வீச்சமும் போகாது.
    The ill odour of the karráli and the bad smell emitted from brass will not leave them.

  12. கற்றாழை சிறுத்தாலும் ஆனை அடி வைக்காது.
    Though the karràlai be small, the elephant will not tread upon it.