Page:Tamil proverbs.pdf/240

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
222
பழமொழி.
  1. கற்றுக் கொடுத்த பேச்சும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாள் நிற்கும்.
    How long will words put into one’s mouth, and rice prepared for a journey, last?

  2. கற்றுக் கற்றுப் பேசாதே.
    Do not speak in a studied way.

  3. கற்றும் கற்றறிமோழை.
    Though he has learnt, he continues a learned fool.

  4. கற்றும் கற்றறிமோழையா?
    What, to be a learned fool?

  5. கற்றோர் அருமை கற்றோர் அறிவர்.
    The learned know the worth of the learned.

  6. கன ஆசை கன நஷ்டம்.
    Excessive desire entails great loss.

  7. கன எலி வளை எடாது.
    When rats are numerous, they do not burrow.

  8. கனக மாரி பொழிந்ததுபோலே.
    As it rained gold.

  9. கனஞ் செய்தால் இஷ்டம், கனவீனத்தால் நஷ்டம்.
    Dignity gains approval, meanness entails loss.

  10. கனத்த உடைமைக்கு அனர்த்தம் இல்லை.
    Solid jewels are invaluable.

  11. கனத்தால் இனமாகும் பணத்தால் சனமாகும்.
    Dignity or worth increases relatives, wealth secures society.

  12. கனத்திற்கு நற்குணம் சுமைதாங்கி.
    Virtue is the support of dignity.

  13. கனத்தைக் கனம் அறியும் கருவாட்டுப் பானையை நாய் அறியும்.
    Dignity is appreciated by dignity, the pot of dried fish is known to the dog.