Page:Tamil proverbs.pdf/247

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
229


  1. காட்டுக் கோழிக்கு உரற் குழியே கைலாசம்.
    The hole in a mortar is paradise to a jungle fowl.

  2. காட்டுப் பூச்சிகள் எதிர்த்த கதை ஆச்சு.
    It has become the story of wild insects offering resistance.

  3. காணக் கிடைத்தது கார்த்திகைப் பிறைபோல.
    That which was seen was like the new moon of November.

  4. காணப்பட்டன எல்லாம் அழியப்பட்டன.
    All that is seen is temporary.

  5. காணாமல் கண்டேனோ கம்பங்கதிரே சிந்தாமல் குத்தடி சில்லி மூக்கே?
    Have I seen kambu-millet for the first time, pound it without scattering thou nose bleeding woman?

  6. காணி ஆளன் வீடு வேகச்சே காலைப் பிடித்து இழுத்த கதை.
    The story of one pulling by the feet the landlord whose house was on fire.

  7. காணி ஏறக் கோடி அழியும்.
    While 1/80 is added a crore is destroyed.

  8. காணி கவிழ்ந்து போகிறதா?
    Does land turn upside down?

  9. காணி காணியாய்ச் சம்பாதித்துக் கோடி கோடியாய்ச் செலவழிக்க வேண்டும்.
    We must acquire by eightieths and spend by crores.

  10. காணிக்கு ஒத்தது கோடிக்கு.
    The profit or loss on an eightieth part of a unit, will determine that on a crore.

  11. காணி சோம்பல் கோடி வருத்தம்.
    A little indolence creates great trouble.

  12. காணி மந்தம் கோடி துக்கம்.
    A little indolence will bring great sorrow.