Page:Tamil proverbs.pdf/252

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
234
பழமொழி.


  1. காலம் கெட்டுக் கைப்பிச்சை எடுத்தாற்போல.
    Like receiving alms when in distress.

  2. காலம் அறிந்து பிழையாதவன் வால் அறுந்த குரங்கு ஆவான்.
    He who does not live according to the times will become an ape.

  3. காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்.
    Time goes, words remain, a ship goes, the shore remains.

  4. காலம் போன காலத்தில் மூலம் வந்து குறுக்கிட்டதுபோல.
    As one is subject to piles in his riper years.

  5. காலம் அல்லாத காலத்திலே கப்பல் ஓட்டி.
    A mariner in unfavourable weather.

  6. காலாலே நடந்தால் காதவழி, தலையாலே நடந்தால் எவ்வளவு தூரம்?
    If on foot it is a katham; how much more distant if one walk on the head?

  7. காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்கக்கூடாது.
    What he tied with his feet others cannot untie with the hands.

  8. காலிலே பட்டபிறகா கிரகசாரம் போதாது?
    After having hurt the foot is it to be attributed to planetary influence?

  9. காலில் விழுகிறது நல்லது மேலில் விழுகிறது கெட்டது.
    To fall at the feet is good, to fall on another is bad.

  10. காலில் பட்டது கண்ணில் பட்டதுபோல.
    That which struck the feet was felt as if it had struck the eye.

  11. காலுக்குப் போட்டால் தலைக்குப் போடுகிறான்.
    If he puts ornaments on his legs, he will put ornaments on his head.

  12. காலுக்குக் கடுப்பே தவிர, கண்ட பலன் ஒன்றும் இல்லை.
    No benefit accrued but the trouble of walking.