Page:Tamil proverbs.pdf/256

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
238
பழமொழி.

கி.

  1. கிடக்கிறது கிடக்கட்டும் கிழவனை எடுத்து மணையிலே வை.
    Leave the things as they are, and take the old man and put him on the stool to bathe.
    The first thing done before a corpse is removed from the homestead is to bathe it.

  2. கிடக்கிறது குட்டிச்சுவர் கனாக் காண்கிறது மச்சுவீடு.
    Dwelling in a ruinous hut and dreaming of a palace.

  3. கிட்ட வா நாயே என்றால் மூஞ்சியை நக்குகிறது.
    When called, the dog licks the face.

  4. கிட்டாத ஒன்றை வெட்டென மற.
    Forget at once what cannot be obtained.

  5. கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டாற்போல ஆயிற்றே.
    It has happened as if a demon had sprung out of a well just dug.

  6. கிணறும் வெட்டித் தவளையும் பிடித்து விடுகிறதா?
    What! is it to dig a well and supply it with frogs?

  7. கிணறு கிடக்க மலை கல்லாதே.
    Whilst there is a well do not excavate a mountain-for water.

  8. கிணறு வெட்டித் தாகம் தீர்க்கலாமா?
    Must one dig a well to quench his thirst?

  9. கிணறு மெத்தினாற் கீழ்வரை பொசியும்.
    If there be water the undermost ring of the well will be wet.

  10. கிணறு இறைக்க இறைக்கச் சுரக்கும்.
    The more a well is drawn, the better the spring.

  11. கிணறு தப்பித் துரவில் விழலாமா?
    Having escaped falling into the well, shall we fall into a tank?

  12. கிணற்றைத் தூர்த்தால் வயிற்றைத் தூர்க்கும்.
    If the well is to be filled up, the belly must be filled up.