Page:Tamil proverbs.pdf/264

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
246
பழமொழி.
  1. குட்டிக் கரணம் போட்டாலும் லோபன் கொடான்.
    The miser will give nothing though you tumble heels overhead.

  2. குட்டிச் சுவரிலே தேள் கொட்ட, கட்டுத் தறியிலே நெறி இடுமா?
    If a scorpion sting in a ruinous dwarf wall, will the glandular swelling appear in the stall?

  3. குட்டிச் சுவரிலே தேள் கொட்டத் தண்ணீர் மிடாவிலே நெறி கட்டுமா?
    Does the sting of a scorpion in a ruinous wall, produce a glandular swelling in a water-pot?

  4. குட்டிச் சுவரை முட்ட வெள்ளெழுத்தா?
    Is he so dim-sighted as to stumble against a ruinous wall?

  5. குட்டி போட்ட பூனை போல் அலைகிறான்.
    He wanders about like a cat that has kittened.

  6. குட்டின குட்டும் குண்டிற் பாய்ந்த தண்ணீரும் வருமா?
    Can a cuff already inflicted and water that has run into a pit be recalled?

  7. குட்டி ஆடு கொழுத்தாலும் வழுவழுப்புப் போகாது.
    Though it become fat, the flesh of a kid is always clammy.

  8. குட்டி குலைத்து நாய்பேரில் வைக்கிறது போல.
    Like pups barking and creating a quarrel among dogs.

  9. குட்டி நாய்கொண்டு வேட்டை ஆடினது போல.
    Like hunting with pups.

  10. குட்டு மானம் தப்பிக் குசவனோடே பேசினால், சட்டையும் பண்ணான், சட்டியும் கொடான்.
    If yon speak familiarly with a potter, he will not respect you, nor will he supply you with chatties.

  11. குணத்தை மாற்றக் குரு இல்லை.
    No guroo-a religious teacher-can change a man's temperament.