Page:Tamil proverbs.pdf/273

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
255
  1. குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் குழியிலே விழுவார்.
    if the blind lead the blind, both will fall into the pit.

  2. குருடி தண்ணீர்க்குப் போக எட்டாள் மினகெட்டதுபோல்.
    As the work of eight persons was stopped by reason of a blind woman going to fetch water.

  3. குருடும் செவிடும் கூத்துப் பார்த்ததுபோல.
    As the blind and the deaf attended a comedy.

  4. குருட்டுக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
    The excuse of a blind horse was his stumbling.

  5. குருட்டுப் பூனை விட்டத்திற் பாய்ந்ததுபோல.
    As a blind cat leaped on the cross beam.

  6. குருட்டுக்கொக்கிற்கு ஊர்க்குளமே சாட்சி.
    The village tank is the witness of the blind crane.

  7. குருட்டுக் கோழி தவிட்டுக்கு வீங்கியதுபோல.
    As a blind fowl was over anxious to feed on bran.

  8. குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மை இட்டு ஆவது என்ன?
    Why adorn blind eyes with collyrium?

  9. குரு மொழி கேளாதவனும் தாய் வார்த்தைக்கு அடங்காதவனும் சண்டி.
    He who will not bear the words of this Guru-religious teacher-and he who disobeys his mother, are worthless.

  10. குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
    He who forgets the words of his Guru will forfeit the divine favor and perish.

  11. குருவியின் கழுத்திலே பனங்காயைக் கட்டித் தூக்கலாமா?
    Can a palmyra fruit be suspended from the neck of a small bird?

  12. குருவிக்குத் தக்க இராம அத்திரம் அல்லவோ?
    Is not the weapon of Rama suited to the bird?