Page:Tamil proverbs.pdf/276

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
258
பழமொழி.
  1. குழந்தைக்கும் நாய்க்கும் குடிபோகச் சந்தோஷம்.
    Children and dogs are pleased with a change of place.

  2. குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
    Children and gods best agree with their admirers.

  3. குழந்தைக் காய்ச்சலும் குண்டனி காய்ச்சலும் பொல்லாது.
    The fever of children and the spite of a slanderer are bad.

  4. குழந்தை தூங்குகிறது எல்லாம் அம்மையாருக்கு இலாபம்.
    The sleep of a child is advantageous to the mother.

  5. குழந்தையின் தேகம்போல்.
    Tender as the body of an infant.

  6. குழந்தாய் குழியில் அமிழ்ந்தாதே.
    My child, do not sink into the pit.

  7. குழப்படி கண்டு திரைகடல் ஏங்குமா?
    Has the stormy weather set the whole sea in motion?

  8. குழம்புப் பால் குடிக்கவும் குமரா கண்டவலியா?
    O my youthful son, is your throat pained by drinking thick milk?

  9. குழியிற் பயிரை எடுத்துக் கூரைமேல் இடலாமா?
    Is it right to train a parasite to the roof?

  10. குழியிற் பிள்ளையை நரி சுற்றுகிறாப்போலே.
    Like a jackal going round the grave of a child.

  11. குளத்தைக் கலக்கிப் பருந்துக்கு இரை இடலாமா?
    Is it proper to agitate the tank to supply prey for kites?

  12. குளத்துக்கு மழை குந்தாணியா?
    Are rain drops the weight of a mortar to a tank?

  13. குளத்திற் போட்டுக் கிணற்றில் தேடலாமா?
    Having put it into the tank, do you seek it in the well?