Page:Tamil proverbs.pdf/284

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
266
பழமொழி.
  1. கூழ் புளித்ததென்றும் மாங்காய் புளித்ததென்றும் உணராமற் சொல்லலாமா?
    Is it proper to say thoughtlessly that the gruel was sour, and then again that it was the mango that was sour?

  2. கூனனைக் கொண்டு குழப்படி மாமி காணிக்குப் பிள்ளை பெற.
    O, mother-in-law, imcite a quarrel through the hunchbacked that an heir may be born.

  3. கூனன் குறை தீர்ந்தான் கொடியோன் வினை பெயர்ந்தான்.
    The hunchbacked is relieved, the cruel man has escaped.

  4. கூனி ஆனாலும் கூடை சுமந்துதான் கூலி பெற வேண்டும்.
    Although her back is crooked, she will have to carry the basket before she gets her hire.

  5. கூனி வாயாற் கெட்டாற்போல.
    As she (Kaikesi) was demoralized by listening to the words of Kuni.

கெ.

  1. கெடு காலத்திற்குக் கெட்டோர் புத்தியைக் கேட்பார்.
    They will listen to the advice of the wicked when their star is not favourable.

  2. கெடு குடி சொற் கேளாது.
    A decaying family will not listen to advic.e.

  3. கெடுக்க நினைக்கில் அடுக்கக் கேடுறும்.
    When you mediate another's ruin, your own will soon follow.

  4. கெடுக்கினும் கல்வி கேடுபடாது.
    Learning can suffer no damage.

  5. கெடுப்பாரைத் தெய்வம் கெடுக்கும்.
    The deity will destroy those that injure others.