Page:Tamil proverbs.pdf/289

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
271
  1. கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
    But half of what one hears is true.

  2. கேள்வி முயல்
    Endeavour to obtain instruction.

கை.

  1. கை அழுத்தமானவன் கரையேற மாட்டான்.
    The miser will not prosper.
    Literally will not “get ashore.” The marriage of a girl is phrased in the same way.

  2. கை இல்லாதவன் கரணம் போடலாமா, கால் இல்லாதவன் ஓடலாமா?
    Can one who has no hands turn a somersault, can one who has no feet run about?

  3. கை உண்டாவது கற்றவர்க்கு ஆமே.
    It is the learned that have hands.

  4. கை ஊன்றிக் கரணம் போடவேண்டும்.
    One has to fix his hands on the ground before he makes a somersault.

  5. கை காய்ந்தாற் கமுகு காய்க்கும்.
    If the palm of the hand becomes callous by drawing water, the areca will bear.

  6. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
    That which reaches the hand does not always reach the mouth.

  7. கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் போல.
    Like a sore on the leg of a weaver, and one on the head of a dog.

  8. கை தப்பிக் கண்ணிலே பட்டாற் கையைத் தறித்துப் போடுவார்களா?
    If the hand by accident strike the eye, will they cut it off?