Page:Tamil proverbs.pdf/293

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
275
  1. கொக்குக்குத் தெரியுமா கோழிக்குஞ்சைக் கொண்டுபோக?
    Does the crane know how to carry away a chicken?

  2. கொக்கென்று நினைத்தாயோ கொங்கணா?
    O devotee, did you mistake me for a stork?

  3. கொங்கிலே குறுணி விற்கிறது, இங்கு என்னத்திற்கு.
    Why remain here when grain sells cheap in the Kongu country.

  4. கொசுகின் முதுகிலே பிளவை வந்ததுபோல.
    As a carbuncle appeared on the back of a mosquito.

  5. கொசுகிலே குறுணி பால் கறக்கலாமா?
    Can you draw from a mosquito a kuruni of milk?

  6. கொசுகிலே பிளவை அதிலே நீரழிவு, அறுக்கிறது எங்கே அட்டை விடுகிறது எங்கே?
    A mosquito suffering from a carbuncle, has also diabetes: where shall we put in the lancet, and how apply leeches?

  7. கொசுகே கொசுகே தலை முழுகு நான் மாட்டேன் சனிக்கிழமை.
    O mosquito, mosquito, bathe your head; I will not, it is Saturday.

  8. கொசுகைப் பொருட்டாய் எண்ணிக் கருடன் எதிர்த்தாற்போல.
    As if a hawk assailed a mosquito imagining it to be a rival.

  9. கொசுகை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறதா?
    What! do you strain out a gnat and swallow a camel?

  10. கொசுகை வடிப்பார், அசுகைப்படுவார்.
    Those who strain out gnats are naturally suspected.

  11. கொச்சிக்குப் போனவன் செய்தியைப் பார், தன் குருவை விற்றவன் செய்தியைப் பார்.
    See the result of his having gone to Cochin, and of one who betrayed his Guru.

  12. கொஞ்சத்தில் இருக்கிறதா குரங்கு மிளகுநீர் குடிக்கிறது?
    What, is it a small thing for a monkey to drink pepper water?