Page:Tamil proverbs.pdf/294

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
276
பழமொழி.
  1. கொஞ்சத்தில் உண்மை இல்லாதவன் கோடியிலும் இருக்க மாட்டான்.
    Not one even of ten millions is unfaithful in a little thing.

  2. கொடிகள் அருகான மரத்திலே படரும்.
    Creepers spread over the trees that grow near them.

  3. கொடிக்குக் காய் கனத்திருக்குமா?
    Is its fruit burdensome to the creeper?

  4. கொடி சுற்றிப் பெண் பிறந்தால் கோத்திரத்திற்கு ஆகாது.
    It is an evil omen to a tribe for a girl to be born with her navel-string round the body.

  5. கொடுக்கிறான் பழனியாண்டி, தின்கிறான் சுப்பனாண்டி.
    Palaniándi gives and Subbanándi eats.

  6. கொடுக்க மாட்டாதவன் கூத்தைப் பழித்தான்.
    He who was not disposed to contribute to the drama spoke disparagingly of it.

  7. கொடுக்கிறதையும் கொடுத்துக் குஷ்டரோகி காலில் விழுவானேன்?
    Whilst bestowing gifts why fall prostrate at the feet of a leper?

  8. கொடுக்காத இடையன் சினையாட்டைக் காட்டினதுபோல.
    As a niggardly shepherd pointed to a sheep that was with young.

  9. கொடுங்கோல் மன்னன் ஆளும் நாட்டிற் கடும்புலி வாழும் காடு நன்று.
    A jungle inhabited by fierce tigers is better than a country ruled by a cruel tyrant.

  10. கொடுங்கோல் அரசன்கீழ் குடியிருக்கல் ஆகாது.
    It is not good to live under a tyrant king.

  11. கொடுத்ததைக் கேட்டால் அடுத்து வரும் பகை.
    If that which has been given be demanded hatred ensues.