Page:Tamil proverbs.pdf/304

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
286
பழமொழி.

ங.

  1. ஙப்பன் பிறந்தது வெள்ளிமலை, ஙாயி பிறந்தது பொன்மலை.
    My father was born in a silver mountain, and my mother was born in a golden mountain.

  2. ஙப்போல் வளை.
    Bend yourself like the letter ங-be humble.

ச.

  1. சகதியிலே கல்லை விட்டு எறிந்தால் தன் துணி என்றும் அசலார் துணி என்றும் பாராது.
    If one throws stones into mud, his own cloth and those of others will be spattered.

  2. சகலன் உறவில் சாண்கொடி பஞ்சமா?
    Is there such a dearth of span-long-creepers that you are obliged to stay at your sister's husband’s house?

  3. சகலமும் கற்றவன்றன்னைச் சார்ந்திரு.
    Associate with a person who is versed in every thing.

  4. சகல தேசத்து வார்த்தையும் கற்றுக்கொள்ளுகிறதே யாவருக்கும் நல்லது.
    To study the different dialects of each country is useful to all.

  5. சகோதரன் உள்ளவன் படைக்கு அஞ்சான்
    He who has a brother does not fear to fight.

  6. சக்குச் சக்கு என்று பாக்குத் தின்பான் சபைமெச்ச, வீட்டிலே வந்து கடைவாயை நக்குவான் பெண்டுகள் மெய்ச்ச.
    When out he chews betel to attract public notice, when he returns home he licks the corners of his mouth to secure the admiration of women.