Page:Tamil proverbs.pdf/305

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
287
  1. சங்கனும் புங்கனும் சந்நியாசிக்கு உதவியா?
    Are fools and blockheads of service to the religious mendicant?

  2. சங்கிலே வார்த்தால் தீர்த்தம், சட்டியிலே வார்த்தால் தண்ணீர்.
    If poured into a conch, water becomes sacred, if into a chatty, it is what it is.

  3. சங்கு ஆயிரம் கொண்டு காசிக்கிப் போனாலும் தன் பாவம் தன்னோடே.
    Though one carries a thousand conchs to Benares, his sin sticks to him.

  4. சங்கு வாயும் ஆண்டி வாயும்
    The mouth of the conch, the mouth of the religious mendicant.

  5. சங்கோசம் விட்டால் சங்கையும் இல்லை.
    When deprived of modesty, there will be no sense of honour.

  6. சடைத் தம்பிரான் சாற்றுக்கு அழுகிறானாம், லிங்கம் பஞ்ச அமிர்தத்திற்கு அழுகிறதாம்.
    It is said that the religious mendicant with matted hair cries for pepper water, and the linga he worships cries for the five delicacies, viz., milk, curds, ghee, sugar and honey.

  7. சடைத் தம்பிரான் சாதம் என்கிறபோது மொட்டைத் தம்பிரானுக்கு மோர் எங்கே கிடைக்கும்.
    When a religious mendicant with matted hair finds it difficult to obtain rice, where will the bald headed obtain butter milk.

  8. சடைத்தம்பிரான் தவிட்டுக்கு அழுகிறபோது லிங்கம் பரமானந்தத்துக்கு அழுகிறதா?
    When a religious mendicant is crying for bran, will the linga ask for delicacies?

  9. சடையைப் பிடித்து இழுத்தால் சந்நியாசி கிட்டவருவான்.
    If dragged by his matted hair, the religious mendicant may be brought near one.