Page:Tamil proverbs.pdf/324

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
306
பழமொழி.
  1. சிற்றாள் எட்டு ஆளுக்குச் சரி.
    A young hireling is equal to eight grown up servants.

  2. சிற்றாத்தை பிள்ளையும் பிள்ளையோ செத்தையிற் பல்லியும் பல்லியோ?
    Is the child of a maternal aunt a child? Is a lizard on the rubbish heap a lizard?
    Thia refers to a species whose chirp is not regarded in augury.

  3. சிற்றின்பம் எண்ணார் மற்றின்பம் கண்டவர்.
    Those who have tasted real happiness, will not regard inferior pleasures.

  4. சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர்.
    Persons of little learning are always talkative.

  5. சிற்றூரிலே பாராக்கூத்தா?
    Will an extended comedy be performed in a mere hamlet?

  6. சிற்றூண் இனிது.
    Moderate refection is sweet.

  7. சிற்றெறும்பைச் சிற்றெறும்பும் கட்டெறும்பைக் கட்டெறும்பும் தேடும்.
    Little ants seek small ants; big ants seek great ones.

  8. சினத்தால் அறுத்த மூக்குச் சிரித்தால் வருமா?
    Will the nose cut off in anger, be restored by laughing?

  9. சினத்தாலும் சீர் அழியப் பேசாதே.
    Dot not speak reproachfully though provoked.

  10. சின்ன சின்னப் பேச்சுச் சிங்காரப்பேச்சு வன்னவன்னப் பேச்சு மெத்த வழக்கமான பேச்சு.
    Short expressions, beautiful expressions; florid expressions, colloqual expressions.