Page:Tamil proverbs.pdf/328

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
310
பழமொழி.
  1. சுடர் விளக்காயினும் தூண்டு கோல் ஒன்று வேணும்.
    Though it may be a bright burning lamp, a splinter is required for raising the wick.

  2. சுடலை ஞானம் திரும்பி வருமட்டும்.
    The solemn thoughts occasioned by the funeral pyre, last till each one returns home.

  3. சுடுகாடு போன பிணம் திரும்பாது.
    The corpse that has gone to the place of incremation will not return.

  4. சுடுகாட்டுப் புகையைப் பார்க்கும் கொம்பேறி மூக்கன்.
    The tree snake looks anxiously for the smoke of the funeral pyre.
    It is said that snakes enjoy the odour of a burning body.

  5. சுடு கெண்டைக்காக ஏரியை உடைக்கலாமா?
    May one burst the bund of a tank in order to get fried fish?

  6. சுட்ட கரியைப் நாய் புரட்டுகிறாப்போல.
    As a dog rolls burning charcoal.

  7. சுட்ட சட்டி அறியுமா அப்பத்தின் சுவையை?
    Does the baking pan appreciate the flavour of a cake?

  8. சுட்ட சட்டியும் சட்டுவமும் கறிச் சுவை அறியுமா?
    Do the chatty and ladle know the flavour of curry?

  9. சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
    Will burnt and moist earth unite?

  10. சுண்டைக்காய் காற் பணம் சுமைகூலி முக்காற் பணம்.
    The price of the chundakai is a quarter of a fanam, its carriage three quarters of a fanam.

  11. சுண்டைக்காய் அளவிலே, சாப்பிடுகிறது பாதியா, வைக்கிறது பாதியா?
    Of the food about the size of a chundaikkai, am I to eat half and leave half?