Page:Tamil proverbs.pdf/333

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
315
  1. சூரியனைக் கண்டு உலகம் விளங்கும்.
    The earth is illumined by the sun.

  2. சூரியனைக் கிரகணம் பிடித்ததுபோல் உன்னைச் சனி பிடித்தது.
    Saturn has seized thee as the eclipse seizes the sun.

  3. சூரியன் எழுமுன் காரியம் ஆடு.
    Form your plans before sunrise.

  4. சூரியனுடைய பிரகாசத்துக்குமுன்னே மின்மினி விளங்கமாட்டாது.
    Fire-flies do not shine in the presence of the sun.

  5. சூரியனைப் பார்த்து நாய் குலைத்ததுபோல.
    As the dog barked at the sun.

  6. சூரியனைக் கல்லால் அடித்ததுபோல.
    Like striking the sun with a stone.

  7. சூலாகு மீன்கள் ஒன்றை ஒன்று மோந்து கொள்ளும். .
    Like chula fish kissing each other.

  8. சூலி சூலி என்று சோற்றைத் தின்று மலடிவாயில் மண்ணைப் போடுகிறதா?
    Do you eat up the rice yourself on the plea of pregnancy, and put earth into the mouth of the barren?

  9. சூழ ஓடியும் வாயிலாலே.
    Though you run round, you will have to enter by the gate.

செ.

  1. செக்கு உலக்கையை விழுங்கினவனுக்கு சுக்குக் கஷாயம் மருந்தாமா?
    Is a decoction of dried ginger a specific for him who has swallowed the pestle of an oil press?