Page:Tamil proverbs.pdf/335

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
317
  1. செட்டியாரே செட்டியாரே என்றால் சீரகம் பணஎடை முக்காற் பணம் என்கிறார்.
    When I respectfully call him Chettiyar, he says that a fanam weight of cumin is sold for three fourths of a fanam.

  2. செட்டி வீட்டிற் பணம் இருக்கிறது, ஆலமரத்தில் பேய் இருக்கிறது.
    Wealth is in the houses of merchants, demons are in banyan trees.

  3. செட்டிகள் மாடு மலை ஏறி மேயுமோ?
    Will the oxen of Chetties ascend and graze on the mountains?

  4. செட்டியாரே வாரும் சந்தையை ஒப்புக்கொள்ளும்.
    Chettiyar, come and take charge of the bazaar.

  5. செட்டியை நீலி தொடர்ந்ததுபோல.
    As Níli-a cruel woman-followed the Chetty.

  6. செட்டிக்கு இறுத்துப் பைக்கும் இறுத்தேன்.
    I paid the Chetty and also his bag.

  7. செட்டுக்கு ஒரு தட்டு, சேவகனுக்கு ஒரு வெட்டு.
    A slap for the merchant, a sword cut for the warrior.

  8. செத்த நாய் திரும்பக் கடியாது.
    The dead dog will bite no more.

  9. செத்தவன் வீட்டில் கெட்டவன் ஆர்?
    Who was ever ruined in a house whose owner was dead?

  10. செத்தவன் வாயிலே மண், இருந்தவன் வாயிலே சோறு.
    Earth in the mouth of the dead, and rice in the mouth of the living.

  11. செத்த மாடு புல்லுத் தின்னுமா?
    Can a dead cow eat grass?

  12. செத்தவன் கண் செந்தாமரை கண், இருந்தவன் கண் நொள்ளைக் கண்.
    The eye of the dead is a red lotus, that of the living a sightless orb.