Page:Tamil proverbs.pdf/337

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
319
  1. செத்த பாம்பு சுற்ற வருகிறதே அத்தை நான் மாட்டேன் என்றாற்போல.
    As if one should say, aunt, I will not, the dead snake comes to coil round my leg.

  2. செத்த பிணத்துக்கு அருகே இனிச் சாகும் பிணம் அழுகிறது.
    Those who will hereafter die weep by the body of the deceased.

  3. செத்த பிணத்துக்கு கண் ஏன், சிவசிவ ஆண்டிக்குப் பெண் ஏன்?
    Why an eye to the corpse, why a wife to the Saiva mendicant?

  4. செத்தால் தெரியும் செட்டியார் வாழ்வு?
    The wealth of the Chetty will be known after death.

  5. செப்படி வித்தை எப்படிச் செய்கிறான்?
    How dexterously he juggles?

  6. செப்பில்லாக் குடிக்கு அப்பாப் பட்டமா?
    Is the title of Appa suited to a family that possesses no brass utensils?

  7. செப்பும் பந்தும் போல.
    Like a box and a ball.

  8. செம்பரம் பாக்கத்தான் பெயர் பெற்றான் மாங்காட்டான் நீர் பெற்றான்.
    Men at Champerempákum get a name, those at Mangadoo get water.

  9. செம்பால் அடித்த காசும் கொடான்.
    He will not give even a copper coin.

  10. செம்பாலைக்குக் கரும்பு ஆலை வலிது.
    Black wood is stronger than red.

  11. செம்பு நடமாடக் குயவன் குடி போகிறான்.
    Copper utensils being introduced, the potter removes.

  12. செம்மறி ஆடு வெளியே ஓடத் திருட்டு ஓனாய் உள்ளே.
    The sheep is without, the thievish wolf is within.