Page:Tamil proverbs.pdf/339

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
321
  1. செய்யும் எனச்சே எனக்கு இரண்டு என்கிறது.
    On my saying do it he replies give me two.

  2. செலவு இல்லாத சிங்காரம்போல.
    Like ornamentation that costs nothing.

  3. செலவோடு செலவு கந்தப் பொடிக்குக் காற் பணம்.
    A quarter fanam for sweet scented powder, over and above the expenses already incurred.

  4. செல்லம் சொல்லுக்கு அஞ்சுமா?
    Will a spoiled child fear rebuke?

  5. செல்லம் சறுக்குதா வாசற்படி வழுக்குதா?
    Does indulgence cause you to slip, or are the door-steps slippery?

  6. செல்லப் பிள்ளை சீலை உடாதாம் பிள்ளை பெறுமட்டும்.
    A spoiled child will not put on clothes till it becomes a mother.

  7. செல்லாத காசு என்றைக்கும் செல்லாது.
    A coin not current is always so.

  8. செல்லும் காசுக்கு வட்டம் உண்டா?
    What discount for current cash?

  9. செல்லும் செல்லாததுக்குச் செட்டியார் இருக்கிறார்.
    There is a Chetty who can say whether the coin is current or not.

  10. செல்வம் பரமண்டலம் செல்லாது, எல்லா மண்டலத்தும் செல்லும்.
    Wealth goes anywhither but to heaven.

  11. செல்வம் உண்டாகும் காலம், செய்கை உண்டு, வல்லமை உண்டு.
    In time of prosperity there is exertion and power.

  12. செல்வம் செருக்குகின்றது காசுக்கு வழி இல்லை.
    He is proud of his wealth though he has not means to obtain a cash.