Page:Tamil proverbs.pdf/344

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
326
பழமொழி.
  1. சொல்வது யார்க்கும் எளிது, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.
    Saying is easy, but doing is difficult.

  2. சொல்வது இலேசு செய்வது அல்லவா பிரயாசம்?
    It is easy to profess, but difficult to perform, is it not?

  3. சொல்வார் சொன்னாலும் கேட்பாருக்கு மதி இல்லையா?
    No matter what others say, have not those who hear, sense to judge for themselves?

  4. சொறிந்து தேயாத எண்ணையும் பரிந்து இடாத சோறும் பாழ்.
    Oil applied without rubbing the head, and boiled rice given with ill-will, are useless.

  5. சொறியாந் தவளையும் வேட்டை ஆடுகிறதாம்.
    It is said that even toads go a hunting.

  6. சொற்பேச்சையும் கேளான் சுயபுத்தியும் இல்லை.
    He has no sense, he will not listen to advice.

  7. சொற்றிறம் கூறல் கற்றவர்க்கு அழகு.
    It becomes the learned to explain the force of words.

  8. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
    The parrot will utter what it is taught,

  9. சொன்னதைச் சொல்லடி சுணைகெட்ட மூளி.
    Say what you are told, you senseless, deformed wretch.

  10. சொன்னது இருக்கச் சுரை பிடுங்குகிறாய்.
    Neglecting what you were told to do, you pull up the beans.

  11. சொன்னபடி கேட்காவிட்டால் மண்ணை வெட்டி மாப் படைப்பேன்.
    If you do not do as I say, I will make an offering of earth.
    Addressed to a demon when driving him out.