Page:Tamil proverbs.pdf/348

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
330
பழமொழி.
  1. (continuation from previous page)
    The Hindus account it disgraceful in a son-in-law to live in the house of a mother-in-law at her expense. Bhárata when enumerating the various sins he would be guilty of, if he coveted the throne of his elder brother Ráma, mentions this as one.

  2. தகப்பன் பட்டம் பிள்ளைக்கு அல்லவா?
    The title of the father descends to the son, does it not?

  3. தகப்பன் தேடக் கர்த்தன், பிள்ளை அழிக்கக் கர்த்தன்.
    The father acquires wealth, the son destroys it.

  4. தகப்பன் பட்டத்தைப் பிள்ளைக்குக் கட்டினால் தகப்பன் சாஷ்டாங்கதண்டம் செய்யவேண்டும் அல்லவோ?
    If the title of the father descend to the son, the father must prostrate himself before him, must he not?

  5. தக்கோன் எனத் திரி.
    So live as to be reputed a deserving man.

  6. தங்கமுடி சூட்டினாலும் தங்கள் குணம் விடார் கசடர்.
    Though crowned with gold, the base will not abandon their natural dispositions.

  7. தங்கச் சூரிக்கத்தியென்று அறுத்துக் கொள்ளலாமா?
    May one cut himself with a knife because it is made of gold?

  8. தங்கத்தைக் குவிக்கிறேன் என்றாலும், தன் புத்தி விடுகிறது இல்லை.
    Though I promised to give a heap of gold, he persisted in his own ideas.

  9. தங்கத்தூள் அகப்பட்டாலும் செங்கற்றூள் அகப்படாது.
    Though gold-dust is procurable, brick-dust is not.

  10. தங்கத்தை உருக்கி விட்டதுபோல.
    As fine gold was melted and poured out.

  11. தங்கம் தரையிலே தவிடு பனையிலே.
    Gold scattered on the ground, bran in an earthen vessel.